சினிமா செய்திகள்

மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சோனுசூட் உதவியால் சென்னை வந்த மாணவர்கள் + "||" + On a separate flight from Moscow With the help of SonuSoot Students who came to Chennai

மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சோனுசூட் உதவியால் சென்னை வந்த மாணவர்கள்

மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சோனுசூட் உதவியால் சென்னை வந்த மாணவர்கள்
சோனுசூட் உதவியால் மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த மாணவர்கள்.

பிரபல வில்லன் நடிகர் சோனுசூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனம் பெற்றார். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கி வருகிறார். வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண் என்ஜினியருக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் ரஷியாவில் சிக்கி தவித்த தமிழ் நாட்டை சேர்ந்த 101 மருத்துவ மாணவ-மாணவிகள் சென்னை திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அதில் பயணித்த மாணவ-மாணவிகள் அனைவரும் சென்னை தியாகராய நகரில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். விமானத்தில் பயணித்தபடி சோனுசூட் உருவப்படத்தை பிடித்தபடி அவருக்கு மருத்துவ மாணவர்கள் நன்றி சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.