சினிமா செய்திகள்

விஜய் பற்றி அவதூறு பேச்சு: “நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” - ரசிகர்கள் போர்க்கொடி + "||" + Slanderous talk about Vijay Actress Meera Mithun has to apologize Fans are the battle flag

விஜய் பற்றி அவதூறு பேச்சு: “நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” - ரசிகர்கள் போர்க்கொடி

விஜய் பற்றி அவதூறு பேச்சு: “நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” - ரசிகர்கள் போர்க்கொடி
“நடிகர் விஜய் பற்றி அவதூறாக பேசியதற்காக, நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே... துணை நடிகை மற்றும் மாடல் என்று சொல்லப்படும் மீரா மிதுன் என்பவர் நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியார் பற்றியும் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக பதிவு செய்துள்ளார்.

அவரை வன்மையாக கண்டிப்பதுடன், புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். மீரா மிதுன் தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

விஜய் பற்றியும், அவருடைய மனைவி பற்றியும் மீரா மிதுன் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பது ரசிகர்-ரசிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “விஜய் பற்றியும், அவருடைய குடும்பம் பற்றியும் பேசுவதற்கு மீரா மிதுனுக்கு தகுதி இல்லை. இன்னொரு முறை அவர் அவதூறாக பேசினால், கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று ரசிகர்-ரசிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் மீரா மிதுன் மீது வழக்கு தொடர விஜய் ரசிகர்கள் முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.