சினிமா செய்திகள்

கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா? + "||" + Was Surya's 'Aruva' film dropped by Corona?

கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா?

கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா?
கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஊரடங்கினால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல், மற்றும் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன. படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவலால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை.

இந்த நிலையில் அருவா படத்தை கைவிட்டு விட்டதாகவும் ஊரடங்கு முடிந்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், ஹரியும் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாராகி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய் - நாளை முதல் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைகிறது 17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை
இந்தியாவில் தினசரி கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைந்து வருவதும், 17 மாநிலங்களில் நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
4. கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.
5. பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை