பிரபல தெலுங்கு நடிகரான ராணா தமிழில் அஜித்துடன் ஆரம்பம் மற்றும் பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டினார். ராணாவுக்கும் ஐதராபாத்தில் சொந்தமாக நிகழ்ச்சி மேலாண்மை, ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்தும் மிஹீகா பஜாஜுக்கும் சமீபத்தில் காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் ராணா, மிஹீகா திருமணம் ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டிடுயோவில் கொரோனா ஊரடங்கினால் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடந்தது. இதில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், நாகசைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், நடிகை சமந்தா உள்பட 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள் திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.
தமிழகத்தில் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுப்பாட்டை தளர்த்தி வழக்கமான நேரங்களில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.