சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு: கவிஞர் வைரமுத்து வாழ்த்து + "||" + Rajinikanth completes 45th year of film career Greetings to the poet Vairamuthu

ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு: கவிஞர் வைரமுத்து வாழ்த்து

ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு: கவிஞர் வைரமுத்து வாழ்த்து
ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு செய்வதையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதனைதொடர்ந்து ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து வாழ்த்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

நகலெடுக்க முடியாத 
உடல்மொழி

சூரியச் சுறுசுறுப்பு

கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்

45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்

இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்

இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!

இவ்வாறு டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை - நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு
எஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
3. தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்
லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.