பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் மரணம்

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுவாமி நாதன். இவர் சூளை மேட்டில் வசித்து வந்தார்.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுவாமி நாதன். இவர் சூளை மேட்டில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு சுவாமிநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.
சுவாமிநாதன் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், விஜய்யின் பகவதி, தனுசின் புதுப்பேட்டை மற்றும் கோகுலத்தில் சீதை, உள்ளம் கொள்ளை போகுதே, அரண்மனை காவலன், மிஸ்டர் மெட்ராஸ், தர்மசக்கரம், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உன்னைத்தேடி, கண்ணன் வருவான், சிலம்பாட்டம், தாஸ், ஆட்ட நாயகன், சகலகலா வல்லவன் உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். சுவாமிநாதனுக்கு லட்சுமி என்ற மனைவியும் அசோக், கும்கி அஸ்வின் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கும்கி அஸ்வின் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். சுவாமிநாதன் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story