கேரள நிலச்சரிவு 52 பேர் பலி : தாங்க முடியாத துயர நிகழ்வு - நடிகர் சூர்யா இரங்கல்


கேரள நிலச்சரிவு 52 பேர் பலி : தாங்க முடியாத துயர நிகழ்வு - நடிகர் சூர்யா இரங்கல்
x
தினத்தந்தி 11 Aug 2020 4:28 PM GMT (Updated: 11 Aug 2020 4:28 PM GMT)

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.  12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள நபர்களை தேடும் பணி தொடர்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அப்பகுதிகளில் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நடமாடும் மருத்துவக் குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் சூர்யா டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கேரள, இடுக்கி மாவடத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்காவும் பிறந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு.

நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story