சினிமா செய்திகள்

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் இயக்குனர் ராஜமவுலி + "||" + Director Rajamouli recovered from Corona

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் இயக்குனர் ராஜமவுலி

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் இயக்குனர் ராஜமவுலி
இயக்குனர் ராஜமவுலி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
ஐதராபாத்,

பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலி தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனை தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதியானது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, “இரண்டு வார தனிமைக் காலத்தை முடித்துவிட்டேன். எந்த அறிகுறியும் இல்லை. பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. ப்ளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிக்கள் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா என்பதைப் பார்க்க மருத்துவர் எங்களை 3 வாரங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காட்டுத்தீயாக பரவி புதிய உச்சம் தொட்டது, கொரோனா இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல பரவி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. இது அச்சம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 947 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 947 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. நாளுக்கு நாள் வேகமாக பரவும் தொற்று: தமிழகத்தில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவுகிறது. ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 284 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் புதிதாக 284 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
5. விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு வெறும் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ரெயில் கொரோனா அச்சம் காரணம்
கொரோனா அச்சம் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வெறும் 30 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது.