சினிமா செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது; தனியார் மருத்துவமனை அறிக்கை + "||" + Popular playback singer S.P. Balasubramaniam's health is stable; Private hospital report

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது; தனியார் மருத்துவமனை அறிக்கை

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது; தனியார் மருத்துவமனை அறிக்கை
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது.
சென்னை,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். ரூ.100க்கு மேல் யார் வேண்டுமானாலும் நிதி தரலாம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பற்றிய தகவல் கடந்த 5ந்தேதி வெளியானது.  தொற்று உறுதியானவுடன், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதனை தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.  அதில், சில அறிகுறிகள் தென்பட்டன.  அதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  எனினும், தனது உடல்நிலை சீராக உள்ளது என பதிவிட்டார்.  இதனால், திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது கண்காணித்து வருகிறது.  அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது என கடந்த 6ந்தேதி தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், லேசான அறிகுறிகளுடன் எங்களது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.  அவரது ரத்தத்தில் உள்ள பிராணவாயு, உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான அளவு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.24 கோடி நிலுவைத்தொகை பிரச்சினை: சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.24 கோடி நிலுவைத்தொகைக்காக சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
2. விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு
விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்தனர்.
3. தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை
தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் என நடிகை காஜல் அகர்வால் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
4. காங்கிரசில் இருந்து விலகி கட்சி மாற திட்டமா? அமைச்சர் நமச்சிவாயம் பரபரப்பு அறிக்கை
காங்கிரசில் இருந்து விலகி கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து அமைச்சர் நமச் சிவாயம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
5. மாநில மொழிகளில் வரைவு அறிக்கை
மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகள் நாடு முழுவதிலும் இருந்து வந்தவண்ணம் இருக்கின்றன.