சினிமா செய்திகள்

பசுமை இந்தியா சவால்: மரக்கன்று நட்ட சுருதிஹாசன் + "||" + Green India Challenge: Surudihasan loses sapling

பசுமை இந்தியா சவால்: மரக்கன்று நட்ட சுருதிஹாசன்

பசுமை இந்தியா சவால்: மரக்கன்று நட்ட சுருதிஹாசன்
பசுமை இந்தியா சவாலை ஏற்று நடிகை சுருதிஹாசன் மரக்கன்று நட்டார்.

தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மரக்கன்றுகள் நடும் பசுமை இந்தியா சவால் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு தனது பிறந்த நாளையொட்டி ஐதராபாத்தில் உள்ள வீட்டு தோட்டத்தில் மரக்கன்று நட்டு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை சுருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்தார். இந்த சவாலை விஜய் ஏற்று சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்று நட்டு அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சுருதிஹாசனும் மகேஷ்பாபுவின் பசுமை இந்தியா சவாலை ஏற்று தனது வீட்டு தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தெலுங்கு நடிகர் ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு பசுமை இந்தியா சவால் விடுத்துள்ளார். தனது சவாலை ஏற்று மரக்கன்றுகள் நட்ட விஜய்க்கும், சுருதிஹாசனுக்கும் மகேஷ்பாபு நன்றி தெரிவித்துள்ளார்.