சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம் + "||" + Vijay Sethupathi Movie Actress: Niharika Wedding Engagement

விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்

விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்
விஜய் சேதுபதி பட நடிகை நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹரிகா. தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். தற்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். நிஹரிகாவையும் நடிகர் பிரபாசையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. இதனை இருவரும் மறுத்தனர்.

இந்த நிலையில் நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர். சமீபத்தில் மணமகனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நிஹரிகா வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் நிஹரிகா சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் கொரோனா ஊரடங்கில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். டிசம்பர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி காட்டம்
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.
2. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா? விஜய் சேதுபதி வருத்தம்
விஜய்சேதுபதி. பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
3. பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
4. 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5. விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.