சினிமா செய்திகள்

‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு + "||" + Anushka refuses to act in 'Mundanai Knot-2'

‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு

‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு
‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றன. அதில், ‘முந்தானை முடிச்சு’ படமும் ஒன்று. இது, 1983-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. அந்த படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருந்தார்.


படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ‘ரீமேக்’ செய்யப்பட்டது.

‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அனுஷ்கா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.