சினிமா செய்திகள்

எஸ்.பி.பி உடல் நிலையில் முன்னேற்றம் - எஸ்.பி.பி மகன் வெளியிட்ட வீடியோ பதிவு + "||" + SPB Physical Improvement - Video Record Posted by SPB Son

எஸ்.பி.பி உடல் நிலையில் முன்னேற்றம் - எஸ்.பி.பி மகன் வெளியிட்ட வீடியோ பதிவு

எஸ்.பி.பி உடல் நிலையில் முன்னேற்றம் - எஸ்.பி.பி மகன் வெளியிட்ட வீடியோ பதிவு
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் பேசும் போது, “எனது தந்தை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மூன்றாவது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஆறாவது தளத்தில் உள்ள தனிப்பட்ட அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றபட்டு உள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மருத்துவர்களிடம் பெருவிரலை உயர்த்தி காட்டுகிறார். அவருக்கு டாக்டர்களை அடையாளம் தெரிகிறது. 

தொடர்ந்து செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். முழுமையாக குணமடைவது ஓரிரு நாட்களில் நடந்து விடாது. ஒரு வாரமும் ஆகலாம். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம். அனைவருடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. அவர் முழுமையான மயக்க நிலையில் இல்லை. மற்றவர்களை அடையாளம் காண்கிறார். எனதுஅம்மாவும் குணமடைந்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
3. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார். அஸரென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.