சினிமா செய்திகள்

கணவராக வருபவரிடம் நடிகை நிவேதா தாமஸ் எதிர்பார்க்கும் தகுதிகள் + "||" + Qualifications that actress Niveda Thomas expects from her fianc

கணவராக வருபவரிடம் நடிகை நிவேதா தாமஸ் எதிர்பார்க்கும் தகுதிகள்

கணவராக வருபவரிடம் நடிகை நிவேதா தாமஸ் எதிர்பார்க்கும் தகுதிகள்
கணவராக வருபவரிடம் தான் எதிர்பார்க்கும் தகுதிகள் குறித்து நடிகை நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் தர்பார், கமலஹாசனின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நிவேதா தாமஸ் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

‘’வாழ்க்கையில் எல்லோரும் காதலிக்க வேண்டும் என்ற அவசியமோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. நான் நேரம் வரும்போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். எதிர்காலத்தில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு நான் இருக்கிறேன். ஆனால் வரப்போகிற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில எதிர்பார்ப்புகள் வைத்துள்ளேன். அவர் உண்மையாக இருக்க வேண்டும். யாரும் உண்மையாக இருப்பவர்களைத்தான் விரும்புவர். இல்லாதபோது ஒருமாதிரி பேசி விட்டு நேரில் வேறு மாதிரி பேசுபவர்களை பிடிக்காது. கணவராக வருகிறவர் எனது பொறுப்புகளை பகிர்ந்துகொள்பவராகவும், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்”

இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.