சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற நடிகை விவாகரத்து + "||" + Divorce of National Award winning actress

தேசிய விருது பெற்ற நடிகை விவாகரத்து

தேசிய விருது பெற்ற நடிகை விவாகரத்து
பிரபல இந்தி நடிகை கொங்கனா சென் விவாகரத்து பெற்றார்.
பிரபல இந்தி நடிகை கொங்கனா சென். இவர் புகழ்பெற்ற பெங்காலி நடிகை அபர்ணா சென்னின் மகள் ஆவார். கொங்கனா சென் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர், பேஷன், லக்கி பை சான்ஸ், டிராபிக் சிக்னல், தல்வார், அகிரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பெங்காலி படங்களிலும் நடித்து இருக்கிறார். இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். கொங்கனா சென் தன்னுடன் ஆஜா நாச்லே, டிராபிக் சிக்னல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த ரன்வீர் ஷோரியை காதலித்தார். இருவரும் 2010-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரூன் என்ற ஆண் குழந்தை உள்ளது.


இந்த நிலையில் கொங்கனா சென்னும், ரன்வீர் ஷோரியும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்தனர். தற்போது இவர்களுக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இதுகுறித்து கொங்கனா சென் கூறும்போது, “ரன்வீரும், நானும் ஒருமித்த கருத்தோடு விவாகரத்து செய்து கொண்டோம். ஆனாலும் மகனின் எதிர்கால வாழ்வுக்காக நண்பர்களாக இருப்போம்” என்றார்.