சினிமா செய்திகள்

பொய், வஞ்சகம் நிறைந்தது: பட உலகை சாடிய தனுஸ்ரீதத்தா + "||" + Lying, full of deceit: Dhanusritha who satirized the Film world

பொய், வஞ்சகம் நிறைந்தது: பட உலகை சாடிய தனுஸ்ரீதத்தா

பொய், வஞ்சகம் நிறைந்தது: பட உலகை சாடிய தனுஸ்ரீதத்தா
பட உலகு பொய், வஞ்சகம் நிறைந்தது என்று நடிகை தனுஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.
தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ள தனுஸ்ரீதத்தா இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல வில்லன் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். தனது சினிமா அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

“பொய், வஞ்சகம், பழிவாங்குவது, ஏமாற்றுவது, தீங்கு செய்தல் போன்றவை நிறைந்ததுதான் சினிமா. இந்தி பட உலகில் நானும் எனது முதல் படத்தில் இருந்து இதனை எதிர்கொண்டேன். என்னை பிடிக்காதவர்கள் பழிவாங்க துடித்தனர். என்னை பற்றி தவறான கிசுகிசுக்களை பரப்பினார்கள். அவர்கள் மூத்தவர்கள் என்பதால் ரசிகர்களும் நம்பினார்கள். சினிமாவில் உள்ள இந்த சிக்கல்களை புரிந்து கொள்ள எனக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. புதிதாக நடிக்க வருபவர்கள் சிலருடைய விருப்பங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவரது செயல் சரியில்லை என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்கள். சினிமா வாரிசுகளுக்கு வழிகாட்ட ஆட்கள் இருப்பதால் அவர்களுக்கு கஷ்டம் இல்லை. ஆனால் வெளியில் இருந்து வருபவர்களுக்கு மோசமான அனுபவமே கிடைக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.