சினிமா செய்திகள்

கொரோனா ஊரடங்கில் விஜய் பட வில்லன் ரோஷன் திருமணம் + "||" + Vijay film villain Roshan gets married during Corona lockdown

கொரோனா ஊரடங்கில் விஜய் பட வில்லன் ரோஷன் திருமணம்

கொரோனா ஊரடங்கில் விஜய் பட வில்லன் ரோஷன் திருமணம்
விஜய் படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர் திருமணம் நடைபெற்றது.
தமிழில் கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ரோஷன் பஷீர். தொடர்ந்து விஜய்யின் பைரவா படத்திலும் வில்லனாக வந்தார். குபேர ராசி படத்தில் நடித்துள்ளார். தற்போது மூன்று ரசிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.


இவர் மலையாளத்தில் பிளஸ் டூ படத்தில் அறிமுகமானார். வசூல் சாதனை நிகழ்த்திய மோகன்லாலின் திரிஷ்யம் படத்தில் வில்லனாக நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் ஆகவே பாபநாசம் வந்தது. ரெட் ஒயின் படத்திலும் மோகன்லாலுடன் நடித்துள்ளார்.

பேங்கிங் ஹவர்ஸ், டூரீஸ்ட் ஹோம், இன்னனு ஆ கல்யாணம் ஆகிய படங்களிலும் தெலுங்கில் துருஷ்யம் படத்திலும் நடித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ரோஷனுக்கும் வக்கீலுக்கு படித்துள்ள பர்ஸானா என்ற பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்து இருந்தனர். பர்ஸானா பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் உறவினர் ஆவார். ரோஷன்பர்ஸானா திருமணம் கேரளாவில் நடந்தது. கொரோனா ஊரடங்கினால் குறைவானவர்களே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
2. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்
கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
5. அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை
அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் பாதிப்பு இல்லை.