சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்? - ரகசியமாக நடந்ததாக பரபரப்பு + "||" + Kajal Agarwal is engaged to be married?

காஜல் அகர்வாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்? - ரகசியமாக நடந்ததாக பரபரப்பு

காஜல் அகர்வாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்? - ரகசியமாக நடந்ததாக பரபரப்பு
காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, மெர்சல், கோமாளி என்று பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் இணைந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு 2013-ல் திருமணம் நடந்தது. இதையடுத்து காஜல் அகர்வாலுக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வந்தார்.


தற்போது காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. தொழில் அதிபர் ஒருவரை அவர் காதலித்து வருதாக ஏற்னவே கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

மணமகன் பெயர் கவுதம் என்றும் நிச்சயதார்த்தத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா சீனிவாஸ் கலந்து கொண்டார் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை
தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் என நடிகை காஜல் அகர்வால் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.