சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு: 2 கிராமங்களை தத்தெடுத்த நடிகை + "||" + Corona vulnerability: Actress who adopted 2 villages

கொரோனா பாதிப்பு: 2 கிராமங்களை தத்தெடுத்த நடிகை

கொரோனா பாதிப்பு: 2 கிராமங்களை தத்தெடுத்த நடிகை
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2 கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.
கொரோனா பரவலால் வேலைகள் இழந்து தவிப்பவர்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பலர் உணவு பொருட்களையும் நிதி உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டியத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை நடிகையான ஜாக்குலின் இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.


கிராமங்களை தத்தெடுத்தது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறும்போது, “ கொரோனா தொற்றினால் மக்கள் பலர் பாதித்துள்ளனர். இது அனைவருக்கும் கஷ்டமான காலம். பலர் அடிப்படை தேவைகளுக்காக போராடுகிறார்கள். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்” என்றார். இந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஜாக்குலின் ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலை வாய்ப்பு பயிற்சி, சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல பணிகளை செய்ய உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 462 பேருக்கு கொரோனா
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 5612 பேருக்கு பரிசோதனை செய்தலில், புதிய உச்சமாக 462 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்
2. 59 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 59 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர
3. இரவு நேர ஊரடங்கு அமல்: திருவாரூரில் இருந்து வெளியூர்களுக்கு கடைசி பஸ் இயக்கப்படும் நேர விவரம் அறிவிப்பு
திருவாரூரில் இருந்து வெளியூர்களுக்கு கடைசி பஸ் இயக்கப்படும் நேர விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. 61 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. கரூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.