பிரபல இயக்குனருக்கு கொரோனா


பிரபல இயக்குனருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Aug 2020 1:01 AM GMT (Updated: 2020-08-19T06:31:50+05:30)

பிரபல பெங்காலி இயக்குனர் ராஜ் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கையும் மீறி இந்தியாவில் பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளனர். நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக்பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, நவ்நீத் கவுர், தெலுங்கு இயக்குனர்கள் ராஜமவுலி, தேஜா, டி.வி. நடிகை நவ்யா சாமி உள்பட பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சையில் இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் ராஜ் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் தமிழில் வெளியான காதல், 7ஜி ரெயின்போ காலனி, சென்னை 2008, சிங்கம், எங்கேயும் எப்போதும், கோ, பொல்லாதவன் ஆகிய படங்களை பெங்காலி மொழியில் ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ் சக்கரவர்த்தி வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுவருவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Next Story