பிடிக்காத கதையில் பத்துகோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் - ராஷிகன்னா


பிடிக்காத கதையில் பத்துகோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் - ராஷிகன்னா
x
தினத்தந்தி 19 Aug 2020 1:11 AM GMT (Updated: 2020-08-19T06:41:48+05:30)

பிடிக்காத கதையில் பத்துகோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று நடிகை ராஷிகன்னா கூறியுள்ளார்.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நிச்சயமாக நடிக்க மாட்டேன். அதே நேரம் கதை பிடித்து இருந்தால் தயாரிப்பாளர் எவ்வளவு குறைவாக சம்பளம் தருவதாக சொன்னாலும் ஒப்புக்கொண்டு நடித்து விடுவேன். நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை. நான் பணத்துக்கு இரண்டாவது இடம்தான் கொடுப்பேன். கதை தேர்வில் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் உங்களுக்கு ஏன் தோல்விகள் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

சில கதைகள் கேட்கும்போது மிகவும் நன்றாக இருக்கும். இது பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் நடிப்போம். ஆனால் அது திரையில் வரும்போது வேறுமாதிரி மாறிப்போய் விடுகிறது. வெற்றி தோல்வி என்பது நமது கையில் இல்லை. ஆனாலும் கதை தேர்வு செய்வதை மட்டும் நம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு ராஷிகன்னா கூறினார்.

Next Story