ராமாயண கதையில் பிரபாஸ், தீபிகா படுகோனே?


ராமாயண கதையில் பிரபாஸ், தீபிகா படுகோனே?
x
தினத்தந்தி 19 Aug 2020 1:21 AM GMT (Updated: 2020-08-19T06:51:40+05:30)

ராமாயண கதையில் பிரபாஸ், தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி இயக்கிய பாகுபலியில் நடித்து பிரபலமான பிரபாஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அவருக்கு 21-வது படம். இந்த படத்துக்கு ஆதிபுருஷ் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஓம்ராவத் இயக்குகிறார். படத்தின் பெயரையும் முதல் தோற்ற போஸ்டரையும் இன்ஸ்டாகிராமில் பிரபாஸ் வெளியிட்டு தீமையை வெற்றிகொள்ளும் ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் திரைப்படம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

ராமாயண கதையின் ஒரு பகுதியை வைத்து இந்த படம் தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. இந்தி, தெலுங்கில் தயாராகும் ஆதிபுருஷ் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 3டி படமாக தயாராகிறது. இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, “கதாபாத்திரங்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். இந்த காவிய படத்தில் நடிக்க ஆர்மாக இருக்கிறேன்” என்றார்.

Next Story