சினிமா செய்திகள்

நடிகை குஷ்பு கண்ணில் திடீர் காயம் + "||" + Actress Khushbu suffered a sudden eye injury

நடிகை குஷ்பு கண்ணில் திடீர் காயம்

நடிகை குஷ்பு கண்ணில் திடீர் காயம்
நடிகை குஷ்பு கண்ணில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு பரபரப்பாக இருக்கிறார். சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை அவர் பாராட்டியது சர்ச்சையாகி காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் சிலர் எதிர்த்தனர். குஷ்பு பா.ஜனதாவில் சேரப்போகிறார் என்றும் பேசினர். இதற்கெல்லாம் அவர் பதிலடி கொடுத்தார்.


இந்த நிலையில் குஷ்பு கண்ணில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். “எதிர்பாராமல் எனது கண்ணில் கத்தியால் காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த காயத்தில் இருந்து விரைவில் மீள்வேன். அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். குஷ்பு கண்ணில் காயம் ஏற்பட்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குஷ்பு விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 பேரை மட்டும் வைத்து தொலைக்காட்சி படப்பிடிப்பை நடத்த இயலாது - நடிகை குஷ்பு
20 பேரை மட்டும் வைத்து தொலைக்காட்சி படப்பிடிப்பை நடத்த இயலாது என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.