சினிமா செய்திகள்

சஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Sanjay was admitted to the hospital again

சஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

சஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
சஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு கடந்த 8-ந்தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இரு தினங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தனக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சஞ்சய்தத்தும் உறுதிப்படுத்தினார். சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


இந்த நிலையில் சஞ்சய்தத் மீண்டும் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன்பு வீட்டுக்கு வெளியே திரண்டு நின்ற ரசிகர்களை பார்த்து தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டினார். சஞ்சய்தத் மனைவி மான்யதா வெளியிட்டுள்ள அறிக்கையில் சஞ்சய்தத்துக்கு முதல் கட்ட சிகிச்சைகள் நடக்க உள்ளது. அவரது நோயை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.