சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல் + "||" + Kamal in the new look of Big Boss Season 4

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல்

பிக்பாஸ் சீசன் 4 புதிய தோற்றத்தில் கமல்
கமல் முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 3 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அடுத்து பிக்பாஸ் 4-வது சீசனையும் தொகுத்து வழங்க தயாராகி வருகிறார். இதில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தோற்றத்தில் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி, மோதல், கவர்ச்சி உடைகள் அணிதல் போன்ற சர்ச்சைகளால் சில அமைப்புகள் எதிர்ப்பு கிளப்பி தடை செய்யும்படியும் வற்புறுத்தின. 4-வது சீசனுக்கு நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை எதிர்த்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி மற்றும் நடிகைகள் சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலர் தேர்வாகி இருப்பதாக பேசப்படுகிறது. இந்த சீசனிலும் பரபரப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.