சினிமா செய்திகள்

ராமாயண கதையில் ராவணனாக சயீப் அலிகான் - சூர்ப்பனகையாக மஞ்சு லட்சுமி? + "||" + Saif Ali Khan as Ravana in Ramayana story - Manju Lakshmi as Surpanagai?

ராமாயண கதையில் ராவணனாக சயீப் அலிகான் - சூர்ப்பனகையாக மஞ்சு லட்சுமி?

ராமாயண கதையில் ராவணனாக சயீப் அலிகான் - சூர்ப்பனகையாக மஞ்சு லட்சுமி?
ராமாயண கதையில் ராவணனாக சயீப் அலிகான் மற்றும் சூர்ப்பனகையாக மஞ்சு லட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர்.


படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது. ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஷ்வினும் ஆதிபுருஷ் கதை ராமாயணத்தை மையமாக வைத்துதான் உருவாகிறது என்று தெரிவித்துள்ளார். கடவுள் ராமராக பிரபாஸை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நடிகர்கள்தான் இதற்கு முன்னால் ராமராக நடித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2022-ல் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தில் வில்லத்தனமான ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்ப்பனகையாக நடிக்க தெலுங்கு நடிகை மஞ்சு லட்சுமி பெயர் அடிபடுகிறது. இவர் தமிழில் கடல், காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமாயண கதையை சித்தரித்து மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன. அதற்கு ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.