சினிமா செய்திகள்

மான் வேட்டையால் ஆத்திரம்; சல்மான்கானை சுட்டுக்கொல்ல சதி + "||" + Rage at deer hunting; Conspiracy to shoot Salman Khan

மான் வேட்டையால் ஆத்திரம்; சல்மான்கானை சுட்டுக்கொல்ல சதி

மான் வேட்டையால் ஆத்திரம்; சல்மான்கானை சுட்டுக்கொல்ல சதி
சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.


மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி ஜெயிலில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும். கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை நடிகர் சல்மான் கான் மறுப்பு
நடிகர் சல்மான்கானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ க்வான் நிறுவனத்தில் பங்கு இல்லை என அவரது சட்டக்குழு மறுத்து உள்ளது.
2. வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு வெட்டு கொலை செய்ய வந்த நபர் இல்லாததால் மர்மநபர்கள் ஆத்திரம்
தாங்கள் கொலை செய்ய வந்த நபர் இல்லாததால் ஆத்திரத்தில் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.