சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ந்தேதி வெளியீடு + "||" + Actor Surya's 'Suraraipporru' will be released on Amazon Prime on October 30

நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ந்தேதி வெளியீடு

நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ந்தேதி வெளியீடு
நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ந்தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை,

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது.  இறுதி சுற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக வருகிறார். ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது.  ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், 'சூரரைப்போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ந்தேதி வெளியிடப்படுகிறது.  இதனால் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

இதுபற்றி நடிகர் சூர்யா கூறும்பொழுது, திரையரங்குகளில் தற்போது திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளது.  கடுமையான உழைப்பில் தயாரான படங்களை, சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

ஒரு தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும்.  சூரரைப்போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து ரூ.5 கோடியை பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  பொதுமக்கள், திரையுலகை சார்ந்தவர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
2. உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக அரசு வெளியீடு
உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
3. வணிக வளாகங்கள் நாளை முதல் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
4. பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசதுரோக செயலில் ஈடுபட்ட காஷ்மீர் போலீஸ் உயரதிகாரி; அதிர்ச்சி தகவல் வெளியீடு
இந்திய வெளிவிவகார அமைச்சகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி காஷ்மீர் போலீஸ் உயரதிகாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசதுரோக செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
5. இலங்கையில் மற்றொரு நிழலுலக தாதாவை சுட்டு வீழ்த்திய சமியாவின் கடந்தகால பின்னணி
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி சமியாவின் கடந்தகால பின்னணி விவரம் வெளிவந்துள்ளது.