சினிமா செய்திகள்

இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் உதயநிதி + "||" + Udayanithi in the Tamil remake of the hit Hindi film 'Article 15'

இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் உதயநிதி

இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் உதயநிதி
இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்டிகிள்15’ ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவா, சயானி குப்தா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அனுபவ் சின்ஹா இயக்கினார். ஒரு கிராமத்தில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்றனர். அதை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதியின் பெயரால் தொல்லைகள் வருகின்றன. அதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பது கதை. இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் வாங்கி இருந்தார். இதன் தமிழ் பதிப்பில் நடிக்கும் கதாநாயகன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


இந்த நிலையில் ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும் கனா படத்தை இயக்கி பிரபலமான அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க ரோமியோ பிச்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். இதில் நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.