சினிமா செய்திகள்

கொரோனாவால் மீன் வியாபாரியான நடிகர் + "||" + Actor became fish trader due to Corona

கொரோனாவால் மீன் வியாபாரியான நடிகர்

கொரோனாவால் மீன் வியாபாரியான நடிகர்
கொரோனாவால் மீன் வியாபாரியான மலையாள நடிகர்.
கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 5 மாதங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் நடிகர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.

இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுனமழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ள டைரக்டர் ஆனந்த் முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். பிரபல மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர் கருவாடு வியாபாரம் செய்கிறார்.


இந்த நிலையில் மலையாள நடிகரான வினோத் கோவுர் மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார். இவர் கழநோல் கனவு, ஆதாமின்டே மகன், புதிய தீரங்கள், உஷ்தக் ஓட்டல், வர்ஷம், படடம்போல், பிரேமம் உள்பட பல மலையாள படங்களில் நடித்துள்ளார். வினோத் கூறும்போது, கொரோனாவால் திரையுலகம் முடங்கி வேலை இல்லாமல் இருக்கிறேன். இதனால் நண்பர்கள் ஆலோசனையின் பேரில் மீன் கடை திறந்து இருக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி தென்காசி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு: தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைந்து வருகிறது
தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைந்து வருகிறது என சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறினார்.
3. ஊழியர்களுக்கு கொரோனா: ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம், வங்கி மூடல்
ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.
4. நாமக்கல் மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 112 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,786 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பெண் டாக்டர் உள்பட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,786 ஆக உயர்ந்து உள்ளது.
5. குமரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி புதிதாக 118 பேருக்கு தொற்று
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். புதிதாக 118 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.