சினிமா செய்திகள்

கொரோனா மன அழுத்தம் உடற்பயிற்சியால் நீங்கும் - நடிகை இலியானா + "||" + Corona stress relieves with exercise - Actress Ileana

கொரோனா மன அழுத்தம் உடற்பயிற்சியால் நீங்கும் - நடிகை இலியானா

கொரோனா மன அழுத்தம் உடற்பயிற்சியால் நீங்கும் - நடிகை இலியானா
கொரோனா மன அழுத்தம் உடற்பயிற்சியால் நீங்கும் என நடிகை இலியானா கூறுகிறார்.
தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனா கொஞ்ச நாள் இருக்கும். பிறகு சகஜ நிலை திரும்பி விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி மாதக்கணக்கில் நீளும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா அமெரிக்காவில் இருக்கிறார். இதனால் மும்பையில் மாதக்கணக்கில் தனியாக இருக்கிறேன். நினைத்தாலே அழுகை வருகிறது. நாட்கள் வாரங்களானது, வாரங்கள் மாதங்களானது மாதங்களும் கடந்து போகிறது. எதுவும் நினைத்த மாதிரி நடக்கவில்லை. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது.


இப்போது உணவு கட்டுபாட்டுக்கு திரும்பி விட்டேன். உடற்பயிற்சிக்கு நாள் தவறாமல் நேரம் ஒதுக்குகிறேன். உடற்பயிற்சியால் தினமும் சுறுசுறுப்பு உற்சாகம் வரும். ஊரடங்கில் பெரிய பிரச்சினையாக இருக்கும் மன அழுத்தத்தை உடற்பயிற்சியால் நீக்க முடிவும். உடற்பயிற்சிக்கு பிறகு எனது மனம் அமைதியாக இருக்கிறது.

ஒரு நாள் திடீரென்று காய்ச்சல் வந்தது. கொரோனாவே என்று பயந்தேன். ஆனால் அது மாத்திரையில் குணமாகி விட்டது. உடற்பயிற்சிக்கு அடிமையாகி விட்டேன். துணி துவைக்கிறேன். பாத்திரங்கள் கழுவுகிறேன். இரவு விதம் விதமாக நானே சமைக்கிறேன்”

இவ்வாறு அவர் கூறினார்.