சினிமா செய்திகள்

படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதா? சூர்யாவுக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு + "||" + Publish movie on OTT? Theater owners protest against Surya

படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதா? சூர்யாவுக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு

படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதா? சூர்யாவுக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு
பெரிய நடிகர் படம் ஓ.டி.டி.யில் வெளியாவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதையடுத்து தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கினால் 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்கள் இணைய தளமான ஓ.டி.டி.யில் வெளியாகின்றன, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வந்தன. அடுத்து சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தையும் அக்டோபர் 30-ந்தேதி இணைய தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். பெரிய நடிகர் படம் ஓ.டி.டி.யில் வெளியாவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “கொரோனாவால் தியேட்டர் அதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். சினிமாவும் நெருக்கடியில் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் சூர்யா எடுத்துள்ள முடிவு தியேட்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்து விடும். இது தவறான முடிவு. இதுபோல் எங்களுக்கும் தியேட்டரில் என்ன படத்தை திரையிடுவது என்று முடிவு எடுக்க உரிமை இருக்கிறது” என்றார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, “சூர்யா எடுத்துள்ள தவறான முடிவை, அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொற்றுநோய் காலம். விரைவில் சகஜ நிலை திரும்பி தியேட்டர்கள் திறக்கப்படும். இந்த நிலையில் சூர்யா திரையுலகுக்கு தவறான வழியை காட்ட வேண்டாம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா?
குறுகிய காலத்திலேயே மளமளவென வளர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவை இப்போது சூர்யா படத்துக்கும் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
2. நடிகை அதுல்யாவுக்கு டைரக்டர் எதிர்ப்பு
தமிழில் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
3. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் 26-ந்தேதி முழுஅடைப்பு
புதுவையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
4. ஏரல் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஏரல் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
5. நவம்பர் 12-ல் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியீடு - நடிகர் சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.