சினிமா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், எஸ்.பி.பி + "||" + Recovered from corona infection, S.P.B.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், எஸ்.பி.பி

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், எஸ்.பி.பி
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டும் நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிராத்தனைகளில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகனான எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தற்போது எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,129- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 129-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு
டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
3. பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது- செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது: மத்திய மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டம்
செய்தித்தாள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
4. கொரோனா நோயாளிகளுக்கு 2-வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம்- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முதல் முறை கொரோனா பாதித்தபோது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியால், மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
5. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரமாக உயர்வு: ஒரே நாளில் 6 பேர் பலி
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.