பணத்தை குவிக்க ஆசை இல்லை எனக்கு வசிக்க வீடு, ஒரு கார் போதும் -அனுபமா பரமேஸ்வரன்


பணத்தை குவிக்க ஆசை இல்லை எனக்கு வசிக்க வீடு, ஒரு கார் போதும் -அனுபமா பரமேஸ்வரன்
x
தினத்தந்தி 24 Aug 2020 10:45 PM GMT (Updated: 2020-08-25T00:35:53+05:30)

பணத்தை குவிக்க ஆசை இல்லை எனக்கு வசிக்க வீடு, ஒரு கார் போதும் என அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சிறுவயதில் இருந்தே சாதாரண நடுத்தர குடும்பத்து பெண்ணாகவே வளர்ந்தேன். அதனால் பணத்தை செலவு செய்யும் விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். அதற்காக எப்போது பார்த்தாலும் பணத்தை பற்றியே யோசிக்கவும் மாட்டேன். எனது சம்பள பணத்தை எப்படி செலவு செய்வது என்பதை அப்பா, அம்மா பார்த்துக்கொள்கிறார்கள். நாம் தனியாக பிழைக்க கோடி கோடியாய் பணம் தேவை இல்லை என்பது என்னுடைய கருத்து. எனக்கு ஷாப்பிங் பைத்தியம் இல்லை. ஐதராபாத்தில் இருந்தால் கையில் ஆயிரம் ரூபாய் போதும். ஒரு நாள் பிழைத்துக் கொள்வேன். பணத்தின் மீது பைத்தியமோ கோடி கோடியாய் குவிக்கும் ஆசையோ எனக்கு இல்லை. நான் உபயோகிக்க ஒரு கார். வசிக்க ஒரு நல்ல வீடு இவ்வளவு போதும். அதற்கு மேல் எனக்கு ஆசைகள் இல்லை. நன்றாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற சினிமா பைத்தியம் மட்டும்தான் இருக்கிறது.”

இவ்வாறு கூறினார்.

Next Story