சினிமா செய்திகள்

நடிகை சரண்யா தந்தை பழம்பெரும் டைரக்டர் ஏ.பி.ராஜ் மரணம் + "||" + Death of Director AB Raj

நடிகை சரண்யா தந்தை பழம்பெரும் டைரக்டர் ஏ.பி.ராஜ் மரணம்

நடிகை சரண்யா தந்தை பழம்பெரும் டைரக்டர் ஏ.பி.ராஜ் மரணம்
நடிகை சரண்யா தந்தையும், பழம்பெரும் டைரக்டர் ஏ.பி.ராஜ் மரணம் அடைந்தார்.
சென்னை,

நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், பழம்பெரும் டைரக்டருமான ஏ.பி.ராஜ், சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. இவர், ‘தேன்மழை’ என்ற தமிழ் படத்தை மலையாளத்தில் டைரக்டு செய்தவர். ‘கை நிறைய காசு’ என்ற தமிழ் படத்தையும் இயக்கியிருக்கிறார். தமிழ், மலையாளம், சிங்களம் ஆகிய 3 மொழிகளிலும் 65 படங்களை டைரக்டு செய்தார்.


வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவாக இருந்த இவர், சென்னையில் உள்ள வீட்டில் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் அடக்கம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நடந்தது. மரணம் அடைந்த டைரக்டர் ஏ.பி.ராஜுக்கு ஜெயபால், மனோஜ் என்ற 2 மகன்களும், சரண்யா பொன்வண்ணன் என்ற மகளும் இருக்கிறார்கள்.