சினிமா செய்திகள்

பெண் தொழில் அதிபரை மணக்கும் சர்வானந்த்? + "||" + Sarvanand to marry female business tycoon?

பெண் தொழில் அதிபரை மணக்கும் சர்வானந்த்?

பெண் தொழில் அதிபரை மணக்கும் சர்வானந்த்?
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த். இந்த படத்தில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார்.
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த். இந்த படத்தில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார். சேரன் இயக்கிய ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் கதாநாயகனாக நடித்து இருந்தார். காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.


தமிழில் திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வானந்துக்கு தற்போது 36 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுவயது தோழியை காதலித்து வந்ததாகவும் அந்த பெண் தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். திருமண தேதி விரைவில் வெளியாக உள்ளது. சர்வானந்த் தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத படமொன்றிலும் நடிக்கிறார்.