சினிமா செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்: ரசிகர்களுக்கு ஜெயம்ரவி வேண்டுகோள் + "||" + Corona threat: Jayamravi appeals to fans

கொரோனா அச்சுறுத்தல்: ரசிகர்களுக்கு ஜெயம்ரவி வேண்டுகோள்

கொரோனா அச்சுறுத்தல்: ரசிகர்களுக்கு ஜெயம்ரவி வேண்டுகோள்
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் ஜெயம்ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ இன்னும் சில நாட்களில் வரப்போகும் எனது பிறந்த நாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளை சிறப்படைய செய்கிறது. ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பி கேட்டுக்கொள்வதெல்லாம் கொண்டாட்டங்களையும், கூட்டமாய் சேர்வதையும் தவிர்த்து விடுங்கள். நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும்தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறோனோ அப்படி நீங்களும் உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் இந்த தொற்றை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. "கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது" - இலங்கை அரசு தகவல்
இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2. கொரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
3. பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
4. தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டம்
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5. ஜம்மு காஷ்மீர்: 5 மாதங்களுக்குப் பிறகு வைஷ்ணவிதேவி கோவில் திறப்பு
5 மாதங்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் திறக்கப்பட்டுள்ளது.