சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார்; மீண்டும் படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் + "||" + Recovered from corona; Amitabh Bachchan in re-shooting

கொரோனாவில் இருந்து குணமடைந்தார்; மீண்டும் படப்பிடிப்பில் அமிதாப்பச்சன்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார்; மீண்டும் படப்பிடிப்பில் அமிதாப்பச்சன்
கொரோனாவில் இருந்து குணமடைந்த நடிகர் அமிதாப்பச்சன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கொரோனா தொற்றில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான குரோர்பதி நிகழ்ச்சியின் 12-வது சீசன் படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் பங்கேற்று உள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கிய இந்த குரோர்பதி நிகழ்ச்சி 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் 3-வது சீசனை மட்டும் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். மற்ற அனைத்து சீசனையும் அமிதாப்பச்சனே தொகுத்து வழங்கினார்.


குரோர்பதி படப்பிடிப்பில் பங்கேற்றது குறித்து அமிதாப்பச்சன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மார்ச் மாதத்துக்கு பிறகு முதல் தடவையாக படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். தனிநபர் விலகல், முக கவசங்கள், கிரிமிநாசினி அனைத்தையும் வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்துகிறோம். படப்பிடிப்பில் முன்பிருந்த இணக்கமும், நட்பும் இல்லை. தேவையானால் மட்டும் பேசுகின்றனர். படப்பிடிப்பு அரங்கம் ஆராய்ச்சி நடக்கும் பரிசோதனை கூடம் போல் உள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 72 பேர் குணமடைந்தனர் மேலும் 58 பேருக்கு பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 பேர் குணமடைந்தனர். மேலும், நேற்று 58 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானதை தொடர்ந்து, இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது.
3. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
4. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.