சினிமா செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயத்தில் மோதிரம் மாற்றி மியாஜார்ஜ் நிச்சயதார்த்தம் + "||" + MiaGeorge's engagement by changing ring at the Christian church

கிறிஸ்தவ தேவாலயத்தில் மோதிரம் மாற்றி மியாஜார்ஜ் நிச்சயதார்த்தம்

கிறிஸ்தவ தேவாலயத்தில் மோதிரம் மாற்றி மியாஜார்ஜ் நிச்சயதார்த்தம்
மியா ஜார்ஜ்-அஸ்வின் பிலிப் நிச்சயதார்த்தம் கிறிஸ்தவ தேவாலயத்தில் முறைப்படி நடந்தது.
ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்த ‘அமரகாவியம்’ படத்தில் கதாநாயகியாக வந்து தமிழில் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். சசிகுமாருடன் வெற்றிவேல், தினேசுடன் ஒரு நாள் கூத்து, விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, விஜய் ஆண்டனியின் எமன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த மியா ஜார்ஜ் மலையாளத்தில் பகத் பாசிலுடன் ரெட் ஒயின்ஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்முட்டியின் பரோல், பிரிதிவிராஜுடன் மெமரீஸ், டிரைவிங் லைசன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.


மியா ஜார்ஜுக்கும், அஸ்வின் பிலிப் என்ற தொழில் அதிபருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க அஸ்வின் வீட்டில் இவர்கள் திருமணத்தை நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி இருமாதங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் மியா ஜார்ஜ்-அஸ்வின் பிலிப் நிச்சயதார்த்தத்தை இருவீட்டு குடும்பத்தினரும் இணைந்து முறைப்படி நடத்தினர். அப்போது இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகிறது. திருமணத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) கேரளாவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.