சினிமா செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமாரின் கணவருக்கு திடீர் நெஞ்சுவலி - ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் + "||" + Actress Vanitha Vijayakumar's husband has been admitted to hospital with sudden chest pain

நடிகை வனிதா விஜயகுமாரின் கணவருக்கு திடீர் நெஞ்சுவலி - ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

நடிகை வனிதா விஜயகுமாரின் கணவருக்கு திடீர் நெஞ்சுவலி - ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்
நடிகை வனிதா விஜயகுமாரின் கணவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,

மாணிக்கம், சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தவர், வனிதா விஜயகுமார். இவர், நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். இவருக்கும், நடிகர் ஆகாசுக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.


இதையடுத்து வனிதா விஜயகுமார் ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர் மூலம் வனிதா விஜயகுமாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார், ஆனந்தராஜை விட்டு பிரிந்தார்.

சமீபத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார். வனிதா விஜயகுமாரின் 3-வது திருமணம் சினிமா வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வனிதா விஜயகுமார் பற்றி காரசாரமான விவாதமும் நடந்தது.

இதுதொடர்பாக வனிதா விஜயகுமாருக்கும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையே சண்டை நடந்தது. இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்தனர். வனிதா விஜயகுமார் தனக்கு ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதேபோல லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.50 கோடி தரவேண்டும் என்று வனிதா விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்தநிலையில் வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பாலுக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது. வனிதா விஜயகுமார் அருகில் இருந்து கணவர் பீட்டர் பாலை கவனித்து வருகிறார்.