சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - டைரக்டர் விக்னேஷ் சிவன் + "||" + When did you get married to Nayantara? - Director Vignesh Sivan answers

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - டைரக்டர் விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - டைரக்டர் விக்னேஷ் சிவன்
நயன்தாராவுடன் திருமணம் எப்போது? என்பது குறித்து டைரக்டர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு வெளிநாடுகளிலும், கோவில்களிலும் ஜோடியாக சுற்றி புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை வலுப்படுத்தி வந்தனர். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-


“எனக்கும், நயன்தாராவுக்கும் இணையதளத்தில் மட்டும் 22 தடவை கல்யாணம் செய்து வைத்து விட்டனர். மூன்று மாதத்துக்கு ஒரு முறை இந்த திருமண வைபவம் நடக்கும். எங்களுக்கு சில நோக்கங்கள் இருக்கிறது. அதை முடித்து விட்டுத்தான் சொந்த வாழ்க்கைக்கு வரவேண்டும் என்று நினைத்துள்ளோம். இப்போது எங்கள் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. காதல் போரடிக்கும்போது திருமணம் செய்து கொள்ளலாம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம். நயன்தாரா தனது படங்களை விளம்பரப்படுத்துவது இல்லை என்று பேசுகிறார்கள். அஜித்குமார் ஒரு முறை நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்று சொல்லி இருப்பார். நீங்கள் வேலையை ஆரம்பித்து விட்டால் பேசுவதை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக படம் பேசவேண்டும் என்ற உணர்வுக்கு வந்து விடுவீர்கள். நயன்தாரா கடின உழைப்பாளி. வேலையில் நேர்மையாக இருப்பார்.”

இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறினார்.