சினிமா செய்திகள்

கேரட் விளைவித்த நடிகை சமந்தா + "||" + Carrot Harvest by Actress Samantha

கேரட் விளைவித்த நடிகை சமந்தா

கேரட் விளைவித்த நடிகை சமந்தா
நடிகை சமந்தா மாடி தோட்டத்தில் விளைவித்த கேரட் பயிர்களை பிடுங்கி கையில் வைத்துள்ள புகைப்படத்தை தற்போது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் நடிகைகள் சமையல், உடற்பயிற்சி, யோகா, பண்ணைகளில் விவசாய வேலைகள் செய்தல் என்றெல்லாம் நேரத்தை கழிக்கிறார்கள். ஆனால் நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனது பங்களா வீட்டில் மாடி தோட்டம் அமைத்து பயிர்களை விளைவித்து வருகிறார்.


இதுகுறித்து அவர் கூறும்போது, “ஊரடங்கில் எனது வீட்டையே விவசாய பண்ணையாக மாற்றி இயற்கை உரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறேன். வீட்டின் மொட்டை மாடியில்தான் இந்த விவசாயம் நடக்கிறது அங்கு காய்கறி தோட்டம் வைத்து இருக்கிறேன். அதில் விதம்விதமான காய்கறிகளை பயிரிடுகிறேன். கீரை வகைகளும் பயிர் செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மாடி தோட்டத்தில் விளைவித்த கேரட் பயிர்களை பிடுங்கி கையில் வைத்துள்ள புகைப்படத்தை தற்போது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். அதில் இந்த வாரம் முழுவதும் எங்கள் வீட்டில் கேரட் இட்லி, கேரட் சமோசா, கேரட் ஜூஸ், கேரட் பச்சடி, கேரட் பக்கோடா, கேரட் அல்வா, கேரட் பிரை போன்றவைதான் உணவு என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.