சினிமா செய்திகள்

“நயன்தாராவுக்கு ரூ.6 கோடி கொடுக்கும்போது எனக்கு 3 கோடி கொடுக்கக் கூடாதா?” - தயாரிப்பாளரிடம் சமந்தா கேள்வி + "||" + "When you give Rs 6 crore to Nayantara, shouldn't you give me Rs 3 crore?" - Samantha questions the producer

“நயன்தாராவுக்கு ரூ.6 கோடி கொடுக்கும்போது எனக்கு 3 கோடி கொடுக்கக் கூடாதா?” - தயாரிப்பாளரிடம் சமந்தா கேள்வி

“நயன்தாராவுக்கு ரூ.6 கோடி கொடுக்கும்போது எனக்கு 3 கோடி கொடுக்கக் கூடாதா?” - தயாரிப்பாளரிடம் சமந்தா கேள்வி
“நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம் கொடுக்கும்போது எனக்கு 3 கோடி கொடுக்கக் கூடாதா?” என்று தயாரிப்பாளரிடம் நடிகை சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகள் அனைவருமே, தெலுங்கு பட உலகிலும் பிரபல நாயகிகளாக இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக நயன்தாரா, திரிஷா, சமந்தா ஆகிய மூன்று பேர்களை சொல்லலாம். இவர்கள் தமிழ் படங்களுக்கு வாங்குவதை விட, தெலுங்கு படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார்கள்.


நயன்தாரா, தமிழ் படத்துக்கு ரூ.5 கோடி வாங்குகிறார். தெலுங்கு படத்துக்கு ரூ.6 கோடி வாங்குகிறார். திரிஷா தமிழ் படத்துக்கு ஒரு கோடி கேட்கிறார். பேரம் பேசினால், ரூ.80 லட்சத்துக்கு சம்மதிக்கிறார். இவரை விட சமந்தா அதிக சம்பளம் வாங்குகிறார். அவர் தமிழ் படத்துக்கு ஒரு கோடி கேட்கிறார். தெலுங்கு படத்துக்கு ஒன்றரை கோடி வாங்கி வந்தார்.

சமீபத்தில், சமந்தாவை ஒரு தெலுங்கு பட அதிபர் சந்தித்தார். தனது புதிய படத்துக்காக, ‘கால்ஷீட்’ கேட்டார். அவரிடம், “மூன்றரை கோடி கொடுப்பீர்களா... நாளைக்கே ‘கால்ஷீட்’ தருகிறேன்” என்றாராம், சமந்தா. “மூன்றரை கோடி ரொம்ப அதிகம் மேடம்” என்று பட அதிபர் சொல்ல...

“நயன்தாராவுக்கு ரூ.6 கோடி கொடுக்கும்போது, எனக்கு மூன்றரை கோடி கொடுக்கக் கூடாதா?” என்று சமந்தா கேள்வி கேட்க- தயாரிப்பாளர் இடத்தை காலி செய்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாரா சொத்து குவிப்பு
தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா.
2. தொழில் அதிபரான சமந்தா
முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தொழில் அதிபராக மாறி உள்ளார்.