சினிமா செய்திகள்

கட்டாய திருமணத்துக்கு அடித்து சித்ரவதை தந்தை மீது நடிகை புகார் + "||" + Actress complains of father beating and torturing for forced marriage

கட்டாய திருமணத்துக்கு அடித்து சித்ரவதை தந்தை மீது நடிகை புகார்

கட்டாய திருமணத்துக்கு அடித்து சித்ரவதை தந்தை மீது நடிகை புகார்
கட்டாய திருமணத்துக்கு அடித்து சித்ரவதை செய்வதாக தந்தை மீது நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை திருப்தி ஷன்கதர். இவர் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் குங்கும் பாக்யா தொடரில் நடித்துள்ளார். தெலுங்கில் ஒய் இடியட் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் மும்பையில் தங்கி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் திருப்தி தனது தந்தை மீது புகார் கூறி சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனக்கு 19 வயது ஆகிறது. எனது தந்தை ராம் ரதன் ஷன்கதர் மும்பைக்கு அனுப்பி என்னை நடிகையாக்கினார். நான் நடித்து ஒரு படம்தான் வெளிவந்து இருக்கிறது. தற்போது 29 வயது இளைஞர் ஒருவருக்கு என்னை கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.

இந்த திருமணத்துக்கு நான் சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்கிறார். எனது தலையை பிடித்து சுவரில் அடித்தார். இதனால் காயம் ஏற்பட்டு உள்ளது. என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். என்னை நடிகையாக்க அவர் செலவு செய்த பணத்தையும் திருப்பி கேட்கிறார். என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து திருப்தியின் தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.