சினிமா செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை தகவல் + "||" + SB Balasubramaniam's health is stable - Hospital Information

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை தகவல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 23 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் மருத்துவமனையின் உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விழிப்புடன் இருக்கிறார். சொல்வதை புரிந்து கொள்கிறார். பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், “அப்பா உடல்நலம் தேறி வருகிறார். நுரையீரல் செயல்பாட்டிலும் முந்தைய 2 நாட்களை விட முன்னேற்றம் உள்ளது. எல்லாம் நல்ல அறிகுறிகளாக உள்ளன. மருத்துவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அப்பாவுக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - எஸ்.பி.பி. சரண் தகவல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைந்து வருவதாக என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
2. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புடன் இருக்கிறார் - மருத்துவமனை தகவல்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புடன், பேசுவதை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
3. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவ அறிக்கையில் தகவல்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகினர் கூட்டு பிரார்த்தனை - ரஜினிகாந்த், விஜய், சூர்யா, இளையராஜா பங்கேற்பு
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகினர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் ரஜினி காந்த், விஜய், சூர்யா, பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
5. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் கூட்டு பிரார்த்தனை
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி இன்று நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.