தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு + "||" + Director Bharathiraja has been elected as the President of the Tamil Film Current Association
தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு
தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை,
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே.விஜயகுமார் அறிவித்தார்.
எஸ்.நந்தகோபால், பி.மதன், சி.விஜயகுமார், ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், ஜி.டில்லிபாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுந்தரம், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா, பி.ஜி.முத்தையா ஆகிய 12 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் பணி முழுமையாகவும், திருப்திகரமாகவும் செய்து முடிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விஜயகுமார் கூறியிருக்கிறார்.