சினிமா செய்திகள்

பிரபல டைரக்டர் மரணம் + "||" + Death of famous director

பிரபல டைரக்டர் மரணம்

பிரபல டைரக்டர் மரணம்
பிரபல மலையாள டைரக்டர் யதீன்தர தாஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சென்னை,

பிரபல மலையாள டைரக்டர் யதீன்தர தாஸ். இவர் பாலுமகேந்திரா, மலையாள இயக்குனர்கள் எம்.வின்சென்ட், சேதுமாதவன், பொற்றேகாட் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கவியூர் பொன்னம்மா, வேணு நாகவல்லி ஆகியோர் நடித்த ஊமன திங்கள் என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்த படம் 1983-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜெர்மன் குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதும் பெற்றது. மம்முட்டி, நெடுமுடி வேணு, சித்ரா, சுகுமாரி, திலகன் ஆகியோர் நடிப்பில் 1985-ல் வெளியான ஓடுவில் கிட்டிய வர்தா என்ற படத்தையும் இயக்கினார். இதுபோல் மேலும் பல படங்களை இயக்கி உள்ளார். தற்போது சாய்குமார் நடிக்கும் உள்கன்னல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டு இருந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலன் இன்றி மரணம் அடைந்தார்

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல டைரக்டர் மரணம்
கன்னடத்தில் பானுப்பிரியா நடித்த சத்ரபதி படத்தை இயக்கி பிரபலமானார். மேலும் சில படங்களை டைரக்டு செய்துள்ளார்.