சினிமா செய்திகள்

சர்வதேச பட விழாக்களில் ‘பச்சை விளக்கு’ + "||" + ‘Green light’ at international film festivals

சர்வதேச பட விழாக்களில் ‘பச்சை விளக்கு’

சர்வதேச பட விழாக்களில் ‘பச்சை விளக்கு’
சர்வதேச பட விழாக்களில் ‘பச்சை விளக்கு’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
சாலை விதிகளை மையப்படுத்தி திரைக்கு வந்த படம் பச்சை விளக்கு. இந்த படத்தில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து இயக்கி இருந்தார். ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் பூடான் நாட்டிலுள்ள பரோ என்ற இடத்தில் நடந்த டிராக் சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு சிறந்த சமூக விழிப்பணர்வு படத்துக்கான விருதையும், இந்தியாவில் நடந்த டிரிப்பிள் சர்வதேச திரைப்பட விழாவில் இன்னொரு விருதையும் பெற்றுள்ளது.


இதுபோல் நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் திரைப்பட விழாவில் இறுதி தேர்விலும் லண்டனில் சி.கே.எப். சர்வதேச திரைப்பட விழா, இத்தாலியில் நடந்த பிளாரன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, அமெரிக்காவில் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா, சவுத் பிலிம் அண்ட் அர்ட்ஸ் அகாடமி விழா, பர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் விழாக்களிலும் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளது என்று படத்தின் டைரக்டர் மாறன் தெரிவித்துள்ளார். படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், இது மேலும் நல்ல படங்களை தருவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.