சினிமா செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம், ‘ஹாலிவுட்’ படமாகிறது; நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிக்கின்றனர் + "||" + The Satankulam incident becomes a ‘Hollywood’ film; Starring Napoleon - GV Prakash

சாத்தான்குளம் சம்பவம், ‘ஹாலிவுட்’ படமாகிறது; நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிக்கின்றனர்

சாத்தான்குளம் சம்பவம், ‘ஹாலிவுட்’ படமாகிறது; நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிக்கின்றனர்
நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் சாத்தான்குளம் சம்பவம், ஹாலிவுட்டில் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெப்போலியன் முதன்முதலாக, ‘டெவில்ஸ் நைட்’ என்ற ஹாலிவுட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதால், அவரை மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அந்தப் படத்தின் பெயர், ‘டிராப் சிட்டி.’


இதில் நெப்போலியனுடன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இது. ப்ராண்டன் டி ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகரும் உடன் நடிக்கிறார். டெல் கணேசன் டைரக்டு செய்கிறார். இது, சாத்தான்குளம் சம்பவத்தை நினைவூட்டுவது போன்ற கதையம்சம் கொண்ட படம்.