சினிமா செய்திகள்

போதை பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு சம்மன் + "||" + Drug case: Summons to actress Riya

போதை பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு சம்மன்

போதை பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு சம்மன்
விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை ரியாவுக்கு போதைபொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ. வசம் வந்த பிறகு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது அவரது வாட்ஸ் அப் உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. சுஷாந்த் சிங்கை கொலை செய்து விட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங்குக்கு தெரியாமல் ரியா டீயில் போதை பொருளை கலந்து கொடுத்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


இதுகுறித்து ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் சிங் வீட்டு மேலாளர் சாமியூல் மிராண்டா ஆகியோரிடம் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர். அவர்கள் ரியா கேட்டுக்கொண்டதன்பேரில் சுஷாந்த் சிங்குக்கு போதை பொருள் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை ரியாவுக்கு போதைபொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நேற்று காலை ரியா வீட்டுக்கு நேரில் சென்று சம்மனை வழங்கினர். இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு: பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது 2 மகன்களை போதை பொருள் வழக்கொன்றில் போலீசார் கைது செய்துள்ளனர்.
2. போதை பொருள் வழக்கு; இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலிடம் 7 மணிநேரம் விசாரணை
இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
3. போதை பொருள் வழக்கு; இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் விசாரணைக்கு நாளை ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. போதை பொருள் வழக்கு; இந்தி திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுதலை
போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவின் மனைவி ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.